Monday, June 13, 2011

முகமூடி கொளயர்கள்-social issue

இரவு எட்டு மணி..,வீட்டில் பால் இல்லை..,தனியாக இருக்கும் பெண்..,பால் வாங்க அருகில் இருக்கும் கடைக்கு சென்ற பொழுது பைக்கில் வந்த இருவர் அந்த பெண்ணை harass செய்துள்ளனர்..,அவளை அசிங்க படுத்தி உள்ளனர்.மற்றொன்று இன்னும் கொடுமை..,பட்ட பகலில் நடந்து சென்ற பெண்ணிடம் பைகில் வந்த ஒருவன் அவளை harass செய்துள்ளான் ..,

வேலை செய்யும் இடதில் பிரச்சனை என்றால் அங்கேயே முரையிடலாம்.வேலைக்கு செல்லும் வழியில் முகம்தெரியாத யரோ ஒருவனால் பிரச்சனை என்றால் என்ன செய்வது
அந்த பெண்கள் என்ன பாடுபடுவார்கள்..,இது போன்ற கட்டு மிரண்டிகளிடம் இருந்து பெண்கள் தப்பிக்க வழியே இல்லயா..,முகம் தெரியாத இவர்களை தங்கள் சுதந்திரத்தை சுயமரியாதையை களவாடுவதை எத்தனை நாட்கள் பொறுத்து கொள்ள வேண்டும்.ஏறக்குறய மூன்றில் இரெண்டு பெண்கள் குறிப்பாக வேலைக்கோ அல்லது படிப்பதற்க்கவோ வெளியில் செல்லும் பெண்கள் இது போன்ற விரும்பதகாத,பிறரிடம் சொல்ல முடியாத சம்பவங்களை எதிர் கொள்கிறார்கள்.மேலும் சிலர் வேறு வழியில்லை..,இவற்றை சந்தித்து தான் ஆகவேண்டும்..,வெளியில் சென்றால் படும் வெயில் மழை காற்றை போல் பெண்களுக்கு இது தவிற்க முடியதா ஒன்று என்று இதற்கு பழகிவிட்டிறுகிறார்கள்.பெற்றெடுத்த பெண்னை பயந்துகொண்டெ அனுப்பும் பெற்றோற்களயும் வேறு வழியிலாமல் இவற்றை எதிர் கொள்ளும் பெண்களையும் காபாற்றவே முடியாதா...!இதற்கு ஒரு தீர்வு காணவேண்டும்..,இந்திய பெண்களின் சுதந்திரத்தை காபாற்ற வேண்டும்.

எந்த ஒரு நாளில் பெண் ஒருத்தி தனியாக இரவில்,ஆளில்லா தெருவில் நடந்து செல்கிறாளோ அபோதுதான் இந்தியாவின் முழு சுதந்திரம் என காந்தி சொன்னார்....,சிரிப்பு வருகிறது...!
பட்ட பகலில் தனியாகா நடந்து செல்லும் பெண்களிடம் முரைகேடாக நடக்கும் மிருகங்கள் வாழும் காடே இன்றைய நாடாக உள்ளது..!இந்தியா என்னும் சுதந்திர காட்டை முதலில் நாடு என்கிற நிலைக்கு கொண்டு வர வேண்டும்..!